Memories of 30th April 2019...
Parthasarathi says, "I'm a very sensitive person. If something unexpected happens, I will sit inside a room and cry. But, after seeing Neerja amma, I could see a lot of changes happening within me.
Neerja was struck by breast cancer twice. But she wrestled with cancer for 21 years and made it kneel down before her.
Even though she is a keen devotee of Sai Baba, Allah and Mary are her two eyes. Neerja says, "Dear one, religion and language are two unnecessary burdens we carry. Because I went to the brink of death and came back, I easily understood this. Now, I love everyone. So, I'm happy. As my heart is free, I'm able to fly high with freedom." She smiles, and the brightness that comes out of her smile, shines on our heart also.
It takes courage to face anything in life. Neerja Malik has conquered cancer with her love. Does love has locks to hold it?"
His original words in Tamil is given below:
30th April, 2019...
நான்லாம் ரொம்பவே சென்ஸிட்டிவ்வான கேரக்டர். எதிர்பாராத ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னாகூட ரூம் போட்டு உக்காந்து அழுகுற வகையறா. ஆனா, நீர்ஜா அம்மாவைப் பார்த்ததுல இருந்தே எனக்குள்ள நிறைய மாற்றங்களை உணர்றேன்.
இரண்டுமுறை தாக்கிய மார்பகப் புற்றுநோயோடு 21 வருஷமா போராடி, மரணத்தையே தன் முன் மண்டியிட வைத்திருக்கும் கேன்சர் சர்வைவர் இவர்...
தீவிர சாய்பாபா பக்தை. இருப்பினும் அல்லாவும், மேரிமாதாவும் இவரின் இரு கண்கள். 'கண்ணா மதம், மொழி இது ரெண்டுமே தேவையில்லாத சுமைகள். நான் சாவோட விளிம்புக்குப் போயிட்டு வந்ததாலதான் என்னால அதை ஈஸியா புரிஞ்சுக்க முடிஞ்சது. இப்போ எல்லோரிடமும் அன்பா இருக்கேன். அதனால, சந்தோஷம் கிடைக்குது. மனசு ஃப்ரீயா இருக்கிறதால சுதந்திரமா பறக்குறேன்' என்கிறார் புன்னகைத்தபடியே. அவர் புன்னகையிலிருந்து வெளிப்படும் பிரகாசம் நம் உள்ளத்திலும் ஒளியைப் பாய்ச்சுகிறது.
எதையும் எதிர்க்க ஓர் துணிவு வேண்டும். உண்மைதான். நீர்ஜா மாலிக் தன் அன்பின் துணையால் புற்றுநோயை வென்றிருக்கிறார்.
❤ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤